திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் பிரபல ரவுடி. லால்குடி பகுதியில் பதுங்கியிருந்த என்கிற ரவுடி ஜெகனை போலீசார் பிடிக்க சென்ற போது அவர் அரிவாளால் தாக்கியதன் காரணமாக போலீசார் வேறு வழியில்லாமல் ரவுடி ஜெகனை என்கவுண்டர் செய்தனர். இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்த செபாஸ்டின் மகனான பிரபல ரவுடி சுரேஷ் (எ)பட்டரை சுரேஷ் (44) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பட்டறை சுரேஷ் தற்போது ஐஜேகே கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சுதா பிரியா கிளை குறிச்சி ஊராட்சியின் துணை தலைவராக உள்ளார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை பட்டறை சுரேஷ் வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த திருவெறும்பூர் போலீசார் விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்ற பட்டறை சுரேஷிடம் டிஎஸ்பி (பொ)சீனிவாசன் தலைமையில் போலீசார் சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு இனி சட்ட விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் வரும் 29ம் தேதிக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.