மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக தனித்து 125 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்ட் கட்சி 56 இடங்களிலும், அஜித் பவார் கட்சி 36 இடங்களிலும் வெற்றி பெற்றது. அங்கு தனித்து ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை அது பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்ற போதிலும், கூட்டணி ஆட்சி உறுதியாகி விட்டது. இந்த முறை ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை பாஜக கொடுக்க விரும்பவில்லை. ஏக்நாத் ஷிண்டே கோபித்துக்கொண்டு சென்றாலும் காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாது. அஜித் பவார் ஆதரவு இருந்தால் மட்டும் பாஜக ஆட்சி அமைத்து விடலாம்.
எனவே ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் இந்த முறை துணை முதல்வர்களாக நியமிக்கப்படலாம். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என்று மகராஷ்ட்ரா அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். திங்கள் அல்லது புதன் கிழமை அங்கு புதிய அரசு பதவி ஏற்கும் என கூறப்படுகிறது.