மக்களவை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக பாட்னாவில் நாளை பிற்பகல் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்றும் அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கலந்து கொள்ளவில்லை என அறிவித்து விட்டார். இதுபோல டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. டில்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு தான் உண்டு என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை காங்கிரஸ் கண்டிக்காததால் அவர் பாட்னா கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.