நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்செந்தூர் வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பர்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பஸ்நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது…. திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளில் 4,500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரி செய்யப்பட்டு 2 மாதங்களில் நிறைவு பெறும். திருச்செந்தூரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும். இவ்வாறு அவர் கூறி னார். அப்போது அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் வேலவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:தூத்துக்குடி