கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழா வருகின்ற 14ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக 31ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வில், லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் மண் கொட்டி சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதை கரூர்
மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் நக்கீரன், மாநகர் நல அலுவலர் இலட்சியவர்ணா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.