Skip to content

முப்பெரும்விழா: நிழற்குடை, கண்மாய் திறந்தார் கம்பம் திமுக எம்.எல்.ஏ

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்துவின் சொந்த முயற்சியால் பல லட்சம்  செலவில் காமாட்சிபுரம் புதுக்குளம் பெரியகண்மாய் பி.டி.ஆர் வாய்க்கால் மூலம்  இணைக்கப்பட்டு  தண்ணீர்  நிரப்பப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து மற்றும் சின்னமனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், கண்மாய்க்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து  காமாட்சிபுரம் ஜங்ஷனில்  பயணியர் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேனி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ராமகிருஷ்ணன் தலைமையில் உத்தமபாளையம்  டிஎஸ்பி செங்கோட்டு வேலன், சின்னமனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஊர் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில்  உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பொதுக்கூட்டம்  நடந்தது. . முன்னாள் தலைமை ஆசிரியர் சி.அர்சுனபெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேருரை ஆற்றினார்.  முடிவில் அன்புமுத்து பாண்டியன்  நன்றி கூறினார்.

error: Content is protected !!