திருச்சி சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர் போலியான பிறந்த தேதி மற்றும் முகவரியை கொடுத்து மோசடி செய்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது இதையடுத்து இமிரேசன் அதிகாரி அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 54) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி ஏர்போர்ட் போனீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பழனியப்பனை கைது செய்துள்ளனர்.
போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…
- by Authour
