Skip to content

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது.விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை  சுங்கத்துறைஅதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பழனியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது அவர் பிறந்த தேதி, ஊரை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பயணியும் இமிகிரேசன் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முகமது அலி ( 54) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி முகேஷ் ராம் கௌதம் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அலியை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!