நடிகர் விஜய் கடந்த 3ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கி விட்டதாக அறிவித்தார். அந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு இருந்தது. கட்சி பெயர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
தமிழக வெற்றி கழகம் என இருப்பது தவறு, தமிழக வெற்றிக்கழகம் என இருக்க வேண்டும். அதாவது வெற்றிக்கும், கழகத்திற்கும் இடையும் ‘ க் ‘ என்ற மெய்யெழுத்து இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கட்சியின் பெயரில் திருத்தம் செய்ய நடிகர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். அதில் கட்சியின் பெயரை தமிழக வெற்றிக்கழகம் என ‘க்’ சேர்த்து புதிய பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளார்.