பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கு விருப்ப மனுக்கள் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. இதனை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி சுமார் 300க்கும் மேற்பட்டோர் வாங்கியுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்த விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்துடன் மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் பாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு இன்று அண்ணா அறிவாலயத்தில் வழங்குகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு திருச்சி மத்திய மாவட்ட திமுக மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலை மாறும் பட்சத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வசதியாக அதற்காகவும் விருப்ப மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..