நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்துக்கு பதில் அளித்தபோது சபையில் அமளி ஏற்பட்டது. அதனை மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாடீல் தனது செல்போனில் படம் பிடித்தார். இதனை பலரும் பார்த்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கட்சித்தலைவர்களின் கருத்தைக்கூறுமாறு, மாநிலங்களவையில் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று கேட்டார். அதன்பின்னர் ரஜனி அசோக்ராவ் பாடீலை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால் அவரை எஞ்சிய கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உரிமைக்குழுவின் அறிக்கை நிலுவையில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமளியை செல்போனில் படம் எடுத்த காங் பெண் எம்பி சஸ்பெண்ட்…
- by Authour
