நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மாநில வாரியான தரவுகள் குறித்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்ட கேள்விக்கு மக்களவையில் பதிலளிக்கப்பட்டது. அதில், “2017 முதல் 2022 வரை (31.10.2022 வரை) எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு எதிராக 56 வழக்குகள் சிபிஐயால் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 10 வழக்குகள் பதிவாகி ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா, சத்தீஸ்கர், மேகாலயா, உத்தராகண்ட், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் தலா ஒரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.