இந்திய நாடாளுமன்றம் வழக்கமாக ஜனவரியில் ஆண்டின் முதல் கூட்டத்தை நடத்தும், அடுத்ததாக பட்ஜெட் கூட்டம் நடைபெறும். பின்னர் ஜூலை, ஆகஸ்டில் மழைகால கூட்டத்தொடரும், நவம்பர், டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடரும் நடைபெறும்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட உள்ளதாகவும், இந்த கூட்டம் 22ம் தேதி வரை, அதாவது 5 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திடீரென இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வந்து இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தை கொண்டு வருவதற்காக இந்த கூட்டத்தை கூட்டி உள்ளார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது விரைவில் தெரியவரும்.