காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கவும், இந்தியர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டவும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டுங்கள் என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் சீற்றப்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றாக நிற்போம் என்பதை இந்தியா காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது.அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும்.அத்தகைய சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது/
இதுபோல மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் கார்கேவும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.