Skip to content

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

  • by Authour

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா உருவாகி  இந்திய அரசியலில்  பரபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில்  நாடாளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப இந்தியா(எதிர்க்கட்சிகள் கூட்டணி) திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக மணிப்பூர் கலவரம்  நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.  மேலும் தக்காளி உள்ளிட்ட  காய்கறிகளின் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை  எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுதல்  உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு  இந்தியா நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளன. மேலும் 7 பழைய மசோதாக்கள் விவாதத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று கருதப்படுகிறது. நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக   கூட்டம்  முந்தைய தினம் அனைதது கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்படும் என்பது  மாலையில் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!