இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்ததும் பேராசிரியர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:
தண்டனை காலம் முடிந்த இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி உள்ளது. இதற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இது தொடர்பாக கவர்னரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க இருக்கிறோம்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவோம். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம். இந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இது தவிர திருச்சி, மயிலாடுதுறை, பெரியகுளம், மத்திய சென்னை ஆகிய 4 தொகுதிகளில் ஒன்றையும் கேட்க இருக்கிறோம். இந்த முறை 2 மக்களவை தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். வேலூர் தொகுதியை நாங்கள் கேட்கவில்லை. ராமநாதபுரம், அடுத்ததாக திருச்சி தொகுதியை கேட்போம்
பாஜக, அதிமுக, கூட்டணி முறிந்து விட்டதுஎன்பது நாடகம். இதை இஸ்லாமிய சமூகம் நம்பத்தயாராகவில்லை.
இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள். ஏனென்றால் 25 கோடி இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் எங்களுக்கு தேவையில்லை என பாஜக கூறுகிறது. பாஜக சார்பில் ஒரு இஸ்லாமியரைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.