Skip to content

மக்களவை தேர்தல் கலந்தாய்வு கூட்டம்…. வரும் 8ம் தேதி மதிமுக ஏற்பாடு

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கலந்தாய்வு மேற்கொள்ள கீழ்க்காணும் முறைப்படி  மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடைபெறும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  கீழ்காணும் மாவட்டங்களில்  கூட்டம் நடைபெறும் இடங்கள், நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேதி/நேரம்: 08.10.2023
காலை: ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு,ஈரோடு மாநகர்
மாலை: திருப்பூர் வடக்கு
சிறப்பு அழைப்பாளர்: ஆடிட்டர் அர்ஜூனராஜ், அவைத் தலைவர்
அ.கணேசமூர்த்தி, எம்.பி.,

08.10.2023 ஞாயிறு
காலை: விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மத்தியம், விருதுநகர் மேற்கு
காலை: மாலை: மதுரை தெற்கு
சிறப்பு அழைப்பாளர்: தி.மு.இராசேந்திரன் துணைப் பொதுச்செயலாளர்
மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்எம்.எல்.ஏ.,

08.10.2023
காலை: திருச்சி மாநகர்
மாலை: திருச்சி தெற்கு
சிறப்பு அழைப்பாளர்: மு.செந்திலதிபன், பொருளாளர்
டாக்டர் ரொஹையா, துணைப் பொதுச்செயலாளர்

07.10.2023
காலை: புதுக்கோட்டை
சிறப்பு அழைப்பாளர்: மு.செந்திலதிபன், பொருளாளர்
டாக்டர் ரொஹையா, துணைப் பொதுச்செயலாளர்

08.10.2023
காலை: கடலூர் கிழக்கு
மாலை: கடலூர் மேற்கு
சிறப்பு அழைப்பாளர்: செஞ்சி ஏ.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர்
ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச்செயலாளர்

08.10.2023
காலை: செங்கல்பட்டு கிழக்கு
மாலை: காஞ்சிபுரம்
மல்லை சி.ஏ.சத்யா, துணைப் பொதுச்செயலாளர்
சு.ஜீவன், உயர்நிலைக்குழு உறுப்பினர்

08.10.2023
காலை:மயிலாடுதுறை
மாலை: தஞ்சை வடக்கு
சிறப்பு அழைப்பாளர்: ஆடுதுறை முருகன்துணைப் பொதுச்செயலாளர்

மேற்கண்ட மாவட்டக் கழகக் கூட்டங்களில் சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் நியமனம் செய்யும் பணியை விரைந்து முடித்து, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் அக்டோபர் 30 ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்த வேண்டும்.

நவம்பர் முதல் வாரத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக கழக முதன்மைச் செயலாளர் பங்கேற்கும் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறும். எனவே அக்டோபர் 30 ம் தேதிக்குள் வாக்குச் சாவடி முகவர் நியமிக்கும் பணிகளை துரிதமுடன் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!