2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக நாளை (வியாழன்)அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்கவுள்ளார்.