பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா சட்ட பேரவையில் மேகதாது அணை கட்ட போறோம் என கூறி உள்ளனர். இது கண்டிக்கதக்கது இரண்டு மாநில நல் உறவை கெடுக்கும் வகையில் கர்நாடகவில் உள்ள முதல்வரும்.துணை முதல்வரும் தூண்டி வருகின்றனர். இது சட்டம் ஒழுஙகு பிரச்சினையை ஏற்படுத்தும்.நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா கடை பிடிக்க வேண்டும்.
காவல் துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி தெரியும். கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள் ? எப்படி வருகிறது எல்லாம் தெரியும். ஆனால் நடவடிக்கை இல்லை.தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
நீர் மேலாண்மைக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், அரசு விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும்.தக்காளி மற்றும் வெங்காயம் வாங்குவது மக்களுக்கு மிகப் பெரிய சுமையாக உள்ளது.மேகதாது பிரச்னை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும். கர்நாடக முதல்வருடன், தமிழக முதல்வர் பேச வேண்டும்.
ஆளுநரும் முதல்வரும் இனைந்து செயல்பட வேண்டும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. முதல்வரும், கவர்னரும் மோதிக்கொள்வது தமிழகத்திற்கு பலவீனம்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை .ஆட்சியை கலைக்கவெல்லாம் முடியாது. ஆட்சியை கலைப்பது என்பது எல்லாம் அந்த காலம். நீதி மன்றம் உள்ளது,எனவே அதற்கு எல்லாம் சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.