தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகள் உயர்த்தும் அளவுக்கு தமிழகத்திலும் உயர்த்த வேண்டும் என்ற உத்தரவாதத்தை பிரதமர் தரவேண்டும்என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் போராடி வருகிறார்கள்.
இன்று திமுக எம்.பிக்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய வாசகங்கள் கொண்ட டீ சர்ட் அணிந்து சபைக்கு வந்து முழக்கமிட்டனர். இதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.