கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமானோரை காணவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணி, நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. இந்த போிடருக்கு அனைவரும் உதவும்படி கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் அதன் வேந்தரும், முன்னாள் எம்.பியுமான பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை வழங்குகிறார். நாளை திருவனந்தபுரம் சென்று முதல்வர் பினராயி விஜயனிடம் இதனை பாரிவேந்தர் வழங்குகிறார். அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாரிவேந்தர் சொத்து சுகங்களை இழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை
- by Authour
