வெளிநாட்டை சேர்ந்த நபர்தான் மருத்துவராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளதாக கூறி ஒரு பார்சலை படம் பிடித்து அனுப்பியுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு டெல்லியில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, பார்சலை டெலிவரி செய்ய பணம் செலுத்துமாறு கூறியிருக்கிறார்.
மேலும் வருமான வரி, ஜிஎஸ்டி வரி என்று பல்வேறு காரணங்கள் கூறி பணம் கட்டுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார். அந்த பெண்ணும் அந்த நபர் கூறியபடி மொத்தம் ரூ.4.50 லட்சத்தை அனுப்பி உள்ளார். அதன் பிறகு, பணம் அனுப்புமாறு கூறிய பொழுது, தான் ஏமாற்றப்படுவதை அந்த பெண் உணர்ந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறினால் யாரும் ஏமாற வேண்டாம். மேலும் ஆன்லைன் டாஸ்க், அதிக சம்பளத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் என்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவார்கள். எனவே பொதுமக்கள் யாரிடமும் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.