Skip to content

ஒலிம்பிக்கில் முதலாவது பதக்கம்… துப்பாக்கி சுடுதலில் மனு பாகர் அசத்தல்..

பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு பைனலில் இந்தியாவின் மனு பாகர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர், 221.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். முதலிரண்டு இடங்களை தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2 புள்ளி), கிம் யேஜி (241.3) கைப்பற்றினர். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குமுதலாவது பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மனு பாகர். மேலும் இவர், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். 12 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) இந்திய வீரர் ககன் நரங் (10 மீ., ‘ஏர் ரைபிள்’) பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!