மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தற்பொழுது 71.54 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு அணைக்கு 1556 கன அடி நீர்வரத்து உள்ளது.அணையில் இருந்து அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக கேரளா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பரம்பிக்குளம் அணையிலிருந்து 3 மதகுகள் வழியாக 1983 கன அடி தண்ணீர் வெளியேற்றம்…
- by Authour
