Skip to content
Home » பாரா ஒலிம்பிக்சில் இந்தியா அபாரம்.. 29 பதக்கங்களை அள்ளியது..

பாரா ஒலிம்பிக்சில் இந்தியா அபாரம்.. 29 பதக்கங்களை அள்ளியது..

  • by Senthil

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை. இப்போட்டியுடன் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்தன. பதக்க பட்டியலில் இந்தியா 6 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கதங்களை கைப்பற்றி 18-வது இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!