கோவையில் நேற்று மக்களுடன் முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார், இதை அடுத்து பொள்ளாச்சி நகராட்சி சார்பாக பல்லடம் சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார் இதில் வருவாய்த்துறை மருத்துவ துறை மின்சாரத்துறை , இ சேவை மையம், காவல் துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர், எம்பி சண்முகசுந்தரம் கூறுகையில்…. பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கலர் புகை குண்டு வீசியதால் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது,
இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களுக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,. எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மத்திய அரசின் ஜனநாயக படுகொலை என தெரிவித்தார், இதில் சார் ஆட்சியர் கேத்ரினாசரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா,துணைத் தலைவர் கௌதமன்,நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன்,மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
