கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண்,ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும் கோபிநாத்,லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவனர் சந்தோஷி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவையில் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் போஸ்டரை,கம்போடியா நாட்டை சேர்ந்த முதன்மை பயிற்சியாளர் சோக்லீப் சோங் வெளியிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரா த்ரோ பால் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
மாநில அளவில் நடைபெற உள்ள இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள் பிரிவில் 22 அணிகளும்,பெண்கள் பிரிவில் 18 அணிகளும் என சுமார் 40 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. கோவையில் முதன் முறையாக காது கேளாதோர் பிரிவினரும் கலந்து கொள்கிறார்கள். போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.