மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நடந்தது. இதில் தடகளம், பேட்மின்டன், நீச்சல் என எல்லா வகை பாரா விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றன. பாட்மின்டன் பிரிவில் 7 -தமிழக வீரர்கள் உட்பட இந்தியா சார்பில் 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் திருச்சி இருந்து கார்த்திக் என்பவர் கலந்துக் கொண்டு ‘எஸ்
எல் 3 ‘ , ‘எஸ்எல் 4 ‘ இரட்டையர் பிரிவுகளில் வெண்கலம் வென்றார். வெண்கலம் வென்ற கார்த்திக்யிற்கு திருச்சி விமான நிலையத்தில் 14.12.23 காலை 7.30 மணிக்கு வரவேற்பு நிகழ்வு நடக்கிறது. அனைவரும் வருகை புரிந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.