தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் 2023–24 ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி உத்திரவின் பேரில் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமிற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். பாபநாசம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக் முன்னிலை வகித்தார். ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண் நலம் மற்றும் கண் பரிசோதனை செய்வது எப்படி என்பது குறித்து பாபநாசம் வட்டார கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ் பயிற்சி அளித்தார். இதில் 35 பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பார்வை பரிசோதனை செய்வதற்கான பார்வை பரிசோதனை அட்டை வழங்கப்பட்டது.
பாபநாசத்தில் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம்… ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்…
- by Authour