தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் வலங்கைமான் அடுத்த தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள சுமார் 140 முதியோர்களுக்கு வேட்டி, துண்டு, அரிசி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட் உட்பட சுமார் ரூ 60,000 மதிப்பிலானப் பொருட்களை வழங்கினர். இதில் பள்ளி நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், மற்றும் ஜெயந்தி, பள்ளி முதல்வர் செல்வி, ஆசிரியைகள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:பாபநாசம்