தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடந்தது. இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைப் பெற்ற நிகழ்ச்சிக்கு நடுக்கடை பிளாக் துலிப் அதிபர் முகம்மது யஹ்யா தலைமை வகித்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவியர்களுக்கு சான்றுகளை வழங்கினார். பெரிய பள்ளி தலைவர் யூசுப் அலி வரவேற்றார். செயலர் முகம்மது சுல்தான் ஆண்டறிக்கை வாசித்தார். முதல்வர் முகம்மது இஸ்மாயில் ஹஜ்ரத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் முத்தவல்லி ரவூப், துணைச் செயலர் சபீர் அகமது, உறுப்பினர்கள் பீர்முகம்மது, அப்துல் மாலிக், அன்வர் பாட்சா, பக்கீர் முகம்மது, ஹபீப் முகம்மது, ஒன்றிய கவுன்சிலர் அனீஸ் பேகம், கல்வி மைய தலைவர் முபா பாரூக் மற்றும் ஜமா அத்தார்கள், பெற்றோர்கள், உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மேலாளர் தாவூத் பாட்சா, முகம்மது உசேன் ஆகியோர் செய்திருந்தனர். பொருளாளர் முகமது பாரூக் நன்றி கூறினார்.