தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக் குடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 24.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய் சங்கர் வரவேற்றார்.இதில் மாவட்டக் கவுன்சிலர் தாமரைச் செல்வன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார ஊராட்சி சிவக் குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி உட்பட கிராம மக்கள், திமுக, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மக்கள் பள்ளிக் கட்டடத்தில் இரண்டு வகுப்பறை மட்டுமே உள்ளது. பள்ளியின் மாடியிலும் கூடுதலாக வகுப்பறை கட்ட எம்.எல்.ஏ நிதி ஒதுக்க வேண்டும். கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியில் ரேஷன் கடை, சமுதாயக் கூடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்றனர்.
