தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த முகாமை லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் செளரி ராஜன் தொடங்கி வைத்தார். இதில் லயன்ஸ் மாவட்டத்தின் முதல் பெண்மணி நிர்மலா, பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், மலர் கொடி, விக்னேஷ், லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர் செல்வம், பொருளாளர் மாரிமுத்து, மாவட்டத் தலைவர்கள் செல்வராஜன், சம்பந்தம், முத்தமிழ்ச் செல்வம், சாப் ஜான், பிரபாகரன், பாண்டியன், மருத்துவமனை கோ ஆர்டினேட்டர் குமார் உட்பட பங்கேற்றனர்.
டாக்டர்கள் பிரியா, அபரஜிதா, சுனேனா பஷீர், சகீரா பானு ஆகியோர் 700 க்கும் மேற்ப் பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.. இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 180 க்கும் மேற்ப் பட்டவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற் கொண்டு, கண்ணில் லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் தலைவர் ஆறுமுகத்தின் தாயார் நாக ரெத்தினம் அம்மாளின் 7 ம் ஆண்டு நினைவாக இந்த முகாம் நடத்தப்பட்டது.