கரூர் மாவட்ட எல்லையான க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் ஆட்டை கட்டி போட்டிருந்தார். நள்ளிரவில் ஆட்டை மர்ம விலங்கு கடித்துள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஆட்டை பார்வையிட்டு சிறுத்தை புலி கடித்துள்ளதா அல்லது வேறு ஏதாவது விலங்கு கடித்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
குப்பம், அத்திப்பாளையம், முன்னூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதா என்ற அச்சத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பல நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தை அங்கிருந்து காவிரி ஆற்றின் வழியாக கரூர் மாவட்ட எல்லையான அத்திப்பாளையம் பகுதிக்கு வந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் சிறுத்தை நடமாட்ட அச்சம் ஏற்பட்டுள்ளது.