Skip to content

அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர உற்சவம் ஒவ் வொரு ஆண்டும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த வருட பங்குனி உத்திர  உற்சவத்திற்கான   கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி  இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத்தில் யாகம் வளர்க்கப்பட்டு கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விநாயகர் மற்றும் முருகன் சுவாமிகள் கொடி மரத்துக்கு எதிரே அலங்கரிக்கப்பட் பல்லக்கில் வைத்து கொடி மரத்துக்கு பூஜைகள் நடைபெற்றது பின்னர் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை காந்திநகர் கிராமமக்கள் சிறப்பாக  செய்திருந்தனர்.

error: Content is protected !!