Skip to content

திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

திருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தின் பின்னே மோதியது. இந்த விபத்தில் இருவரும் துாக்கிவீசப்பட்டனர். கோபிகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். கோபிகிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இனாம் மணியாச்சியை சேர்ந்த ராஜ் அழகு மதன் (28) என்பவர் மீது வழக்கு பதிந்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!