திருச்சி அடுத்த கம்பரசம்பட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.13.70 கோடி செலவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:
பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்த்து பறவைகள் பூங்காவும் திறக்கப்படும்.
இதேபோல் முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நிதி கேட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கொம்பு பூங்கா பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருப்பதாக கடந்தமாதம் இ தமிழ் செய்தி வெளியிட்டிரு்நதது. இந்த நிலையில் முக்கொம்பு பூங்காவை சீரமைக்க திட்டம் தீட்டப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.