பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,பிரகாஷ் சிங் அவர்களின் மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் அவர்களுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், கழக
மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் , மறைந்த பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேற்று (26-04-2023), மலர்வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினர் . மேலும் சுக்பிர் சிங் பாதல் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.