பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர் இதுகுறித்த வீடியோவும் வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, பர்த்வான், ரெய்னாவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசுகையில் , ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படும் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பற்றி அந்த பெண் பேசும் வீடியோ பதிவை பார்க்கும் போது எனது இதயத்தில் ரத்தம் கொட்டியது. இதுபற்றி செய்திகள் வாயிலாக தெரிந்து இருந்தாலும் தற்போது தான் வீடியோ பார்த்ததாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
இனிமேல் ராஜ்பவனில் வேலைக்குச் செல்லமாட்டேன் என்று அந்தப் பெண் சொல்லிவிட்டாள். அந்த பெண் பயப்படுகிறாள். மீண்டும் தவறாக நடந்துகொள்வார்களோ என் பயப்படுகிறாள் என மம்தா கூறினார். மேலும், சந்தேஷ்காலி பாலியல் புகார் குறித்து பற்றி பேச இனி போஸுக்கு உரிமை இருக்கிறதா.? என்றும் அவர் விமர்சித்தார்.
இனி சந்தேஷ்காலி புகார்கள் குறித்து உங்களால் கருத்து கூற முடியுமா? சந்தேஷ்காலியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிர்வாக நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும் அந்த நிலைமையை நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததை மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினார்.