கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பர்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்றது. முரளி என்ற பெயிண்டர் கூட அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு வந்து உள்ளார். 9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க துவங்கி உள்ளர். சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழே விழுந்து உள்ளார். 4 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து அவர் மதில் சுவரில் தலை பின் பகுதி மோதியத்தில் உயிருக்கு போராடி உள்ளார். உடன் வேலை செய்தவர்கள் அருகில் செல்ல பயத்தில் நடிங்கியபடி நின்று உள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரன் ஒரு மணி நேரம் ஆகியும் மருத்துவ உதவி கிடைக்க வில்லை. யாரும் அருகில் உள்ளமருத்துவ மனைக்கு அழைத்தும் செல்ல வில்லை. நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உள்ளனர்.அங்கு வந்து மருத்துவர்கள் அவரை பிசோதனை செய்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து சென்றனர். வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.