ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் P. R.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி பூம்புகாரில் துவங்கி, ஜூன் 12ல் மேட்டூர் அணையை சென்றடைய உள்ளனர். இன்று இரண்டாம் நாளாக காலை கல்லணையில் துவங்கி, மதியம் 12 மணிக்கு திருச்சி காவிரி பாலம் முன்பு பேரணி வந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேரணியினரை வரவேற்றார். பின்னர் விவசாயிகள் அங்கிருந்து சிந்தாமணி அண்ணாசிலை, மெயின்காட்கேட், கரூர் பைபாஸ் சாலை வழியாக செல்ல உள்ளனர்.
