Skip to content

ஊராட்சி மணி அழைப்பு மையம்… 26ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

  • by Authour

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ‘ஊராட்சி மணி’ என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற  26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *