மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக அனைத்து விவசாய கூட்டமைப்பினர் மாப்படுகை ராமலிங்க தலைமையில் பாமாயிலை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் மார்க்.கம்யூ கட்சியின் பொறுப்பாளர் கணேசன் டெல்டா பாசன சங்க தலைவர் பணித்தலை மேடு அன்பழகன், கரும்பு விவசாய சங்க பொறுப்பாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் விவசாயி சங்க தலைவர் துரைராஜ் உரையாற்றுகையில் , பாமாயிலை பல்வேறு நாடுகள் உபயோகிப்பதை நிறுத்தியும் பல நாடுகள் அதை இன்ஜின் ஆயிலாக உபயோகப்படுத்த நிலையில் நம் நாட்டில் மட்டும் அதானே அம்பானிகள் மூலம் பாமாயில் இறக்குமதி செய்து அதற்கு மானியமும் அளித்து ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கண்டிக்கத்தக்கது, நம் நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் போன்றவற்றை கொள்முதல் செய்து அவற்றை ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும், பாமாயிலால் பல்வேறு கெடுதல்களும் நோய்களும் உருவாகிறது என்று பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
பாமாயிலை ரேஷன் கடையில் கொடுக்காதே.. தடை செய்.. ஆர்ப்பாட்டம்..
- by Authour
