சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எல். ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை அதானி நிறுவனத்திற்கு மடைமாற்றம் செய்ததை விசாரணை செய்ய வேண்டும், வேலையின்மை, வணிகம், கல்வி, சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும், சிறு, குறு, நிறுவனங்களுக்கு வரி
உயர்வை கைவிட வேண்டும், கார்ப்பரேட் கொள்ளைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், செல்வி, மணிகண்டன், சந்திரன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.