தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23 -ந் முதல் ஆகஸ்ட் 18-ந் வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை பல்வேறு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். அந்த வகையில் திருச்சி வழியாக இயக்கப்படும் பல்லவன் மற்றும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ஜூலை 23-ந் தேதி முதல் ஆக-18-ந் தேதி வரை காரைக்குடியில் இருந்து இயக்கப்படும் பல்லவன் ரயில் எண் 12606 செங்கல்பட்டுடன் நிறுத்தப்படுகிறது. எழும்பூர் வரை இந்த ரயில் செல்லாது. அதேபோல ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12653 ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.
ஜூலை 23-31 தேதி வரை ராக்போர்ட், பல்லவன் ரயில்கள் தாம்பரம் வரை தான்..
- by Authour
