சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கத்திலும் 9 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து செல்லும் பல்லவன் வரும் 16, 17, 20,21, 23, 24, 27,28 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது்.
அதுபோல காரைக்குடியில் இருந்து சென்னை மார்க்கத்தில் வரும் 17,18, 21, 22, 24, 25, 28, மார்ச்1, 4 ஆகிய தேதிகளில் ரத்தாகிறது.
இதுபோல திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச்ச் 2, 3 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடக்க இருப்பதால், பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்சி இன்டர்சிட்டி உள்பட பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.