அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் பாதைகளில் மயில்கள், குரங்குகள், இரண்டும் அதிக அளவில் உள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை மலை கோவிலில் சுற்றி திரியும் குரங்குகளுக்கு கொடுப்பது வழக்கம். அவ்வப்போது அந்த குரங்குகளுக்கு உணவு கிடைக்கவில்லை எனில் பக்தர்கள் கொண்டுவரும் பைகளை பிடிங்கி கொண்டு ஓடும். இதனால் பக்தர்கள் அச்சதில் இருந்து வந்தனர். பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவ்வப்போது வனத்துறை அதிகாரிகளின் தகவல் தெரிவிக்கப்பட்டு கூண்டு வைத்து குரங்குகளை பிடிப்பார்கள். அப்படி
பிடிக்காமல் இருக்கும் குரங்குகள் அவ்வப்போது பக்தர்களை தொந்தரவு செய்யும் பக்தர்கள் புகார் தெரிவீத்தால் வனத்துறை பிடித்து செல்வது வழக்கம். இப்படி இருக்கையில் இன்று பழனி மலை கோவிலில் குரங்குகள் கூட்டம் இரண்டு அணிகளாக பிரிந்து ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே குரங்குகளை வனத்துறையினர் மலைக்கோவிலில் உள்ள அனைத்து குரங்குகளையும் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .