Skip to content
Home » பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… டைரக்டர் மோகன்ஜி கைது…

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… டைரக்டர் மோகன்ஜி கைது…

  • by Authour

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார்   எழுந்து  பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய இயக்குனர் மோகன் ஜி எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? என கேள்வி கேட்டிருந்த இயக்குனர் மோகன் ஜி,

பழனி பஞ்சாமிரதத்தில் கூட சில பொருட்களை கலந்ததாக தகவல்கள் கூறப்பட்டன. ஆனால் அதற்கு சாட்சிகள் இலலை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருச்சி, பழனி உள்பட  பல இடங்களில்  மோகன் ஜி மீதுபுகார் அளிக்கப்பட்டிருந்தது. திருச்சி எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில்  சென்னை ராயபுரத்தில் உள்ள  வீட்டில் மோகன்ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர் உடனடியாக திருச்சி அழைத்து வரப்படுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *