Skip to content
Home » பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

  • by Senthil

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக  வந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீஸ்காரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது  மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், ஊரவ வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான அமுதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இந்த சம்பவம் குறித்து  அவர் விசாரணை நடத்தி  ஒரு மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிப்பார் என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!