சேலம் மாவட்டம் , வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும், இச்சந்தைக்கு சேலம் மாவட்டமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக கொண்டு
வருகிறார்கள், இன்னிலையில் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதாலும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் இன்று வீரகனூரில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆடு, மாடுகளை விற்பனை செய்வதற்காக ஏராளமான விவசாயிகள் சுமார் ஐந்தாயிரம் ஆடுகளையும், 500க்கும் மேற்பட்ட மாடுகளையும் விற்பனை செய்ய கொண்டு வந்தார்கள்,
அதிகாலை முதலே ஆடு, மாடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், சேலம், தம்மம்பட்டி , தேனி, துறையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள், இஸ்லாமியர்கள் என ஆடுகளை வாங்க குவிந்ததால் கால்நடை சந்தை களைகட்டியது, 60 கிலோ எடை கொண்ட போயர் இன ஆடு ஒன்று 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது, மேலும் ஆடு ஒன்று தரத்திற்கு ஏற்றவாறு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விலையேற்றம் அடைந்ததோடு உயிர் எடையில் கிலோ 400 ரூபாய் வரை விற்பனையானதால் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றது, மேலும் சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகரித்ததால் ஆடு ஒன்றுக்கு சராசரி விலையை விட ஆயிரம் ரூபாய் கூடுதலாக விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,